முதல்வர் தனி செயலரின் மனைவிக்கு பேராசிரியர் பதவி : ஐகோர்ட்டு தடை - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

முதல்வர் தனி செயலரின் மனைவிக்கு பேராசிரியர் பதவி : ஐகோர்ட்டு தடை

கேரளாவில் பல்கலை. இணை பேராசிரியர் பதவிக்கு முதல்வரின் தனி செயலரின் மனைவி நியமனத்திற்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

கேரளாவில் கண்ணூர் பல்கலை கழகத்தில் மலையாளம் துறையில் இணை பேராசிரியர் பதவிக்கு 6 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் துணை வேந்தர் தலைமையிலான தேர்வு கமிட்டி விண்ணப்பத்தை பரிசீலித்து தர வரிசைபட்டியலை வெளியிட்டது.
இதில் பிர்யா வர்கீஸ் என்பவர் தேர்வு செய்யப்படடார். இவர் முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செலயரான கே.கே. ராகேஷின் மனைவி.

இந்நிலையில் பிரியா வர்கீஸ் தேர்வு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டதில் பிரியா பெற்ற மதிப்பெண் மிகவும் குறைவு. ஆனால் அவரை விட அதிக மதிப்பெண் பெற்றவர் ஜோசப் ஸ்கேரியா என்பதும் தெரியவந்தது. முதல்வரின் தனிச்செயலர் என்ற செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக பணி நியமம் செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து முறைகேடாக பிரியா வர்கீசை நியமித்தது தொடர்பான புகாரில் மாநில பல்கலை கழகங்களுக்கான வேந்தரான கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கடந்த வாரம் பிரியா வர்கீஸ் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து விட்டார். இதனை எதிர்த்து பல்கலை சிண்டிகேட் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு வந்தது. இதில் , பிரியா வர்கீசின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை வரும் 31-ந்தேதி ஒத்தி வைத்தது.

No comments: