TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Press News for With-held Candidates
ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப்பட் ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை I/கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனம் 2020-2021 பத்திரிக்கை செய்தி
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை- I / கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண்.01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.022022 முதல் 20.02.2022 வரை கணினி வழித் தேர்வுகள் (Computer Based Test) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு இவ்வாரிய இணையதளத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான 12 பட்டியல்கள் 28.08.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும், 02.09.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 12 பட்டியலில் இடம் பெற்ற பணிநாடுநர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனச்சுழற்சி அடிப்படையிலும் History. Economics, Geography, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Computer Science, Commerce, Physical Education, English, Tamil, ஆகிய பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப்பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அவ்வாறு வெளியிடப்பட்ட தற்காலிகத் தெரிவுப் பட்டியலில் சில பணிநாடுநர்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால் அப்பணிநாடுநர்களின் தெரிவு withheld-ல் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு withheld-ல் வைக்கப்பட்டுள்ள ஒரு சில பணிநாடுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை தற்போது சமர்ப்பித்துள்ளனர். ஆனால், இன்னும் சில பணிநாடுநர்கள் இன்றுவரை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை.
எனவே, தற்காலிகத் தெரிவுப் பட்டியலில் இடம் பெற்று withheld for want of certificate எனக் குறிப்பிடப்பட்டுள்ள பணிநாடுநர்கள் உடனடியாக 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தங்களது சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
நாள்: 17.09.20:22
தலைவர்
CLICK HERE TO DOWNLOAD

No comments:
Post a Comment