7th pay commission HIKE: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும் - Daily Dhuniya

Breaking

Saturday, September 17, 2022

7th pay commission HIKE: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும்

7th pay commission HIKE: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும் - 7th pay commission HIKE: Central government employees will get good news on Navratri 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் இறுதியில் அடிக்கப் போகுது ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வு

நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும்

ஓய்வூதியதாரர்களுக்கும் பணியாளர்களுக்கும் பணபலன்கள் அதிகரிக்கும்

7வது ஊதியக்கமிஷன் டிஏ உயர்வு சமீபத்திய செய்திகள்:மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் இப்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இதில், மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளது.

டிஏவுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு தொடர்பான கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்துள்ளதாக ஜீ மீடியா, தனது ஆதாரங்கள் மூலம் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில், செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்றும், டிஏ குறித்த அறிவிப்பு வரும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிஏ உயர்வு 4 சதவீதம் அதிகரிக்கப்படும். தற்போது டிஏ உயர்வு 34 சதவீதமாக உள்ளது. உயர்வுக்குப் பிறகு இது 38 சதவீதமாக இருக்கும்.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக டிஏ உயர்வு?

மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை - ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை இந்த உயர்வு அமல்படுத்தப்படும். ஜனவரி 2022 இல், 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, அப்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஏஐசிபிஐ என்ற அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின் அடிப்படையில் இந்த உயர்வு செய்யப்படுவது வழக்கம்.

52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 63 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயன்

ஜூலை-டிசம்பர் 2022 காலக்கட்டத்திற்கான அகவிலைப்படி உயர்வால் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 63 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 7வது சம்பள கமிஷனில் (7வது CPC) குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 என்பதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு



1. ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - மாதம் ரூ 18,000

2. தற்போதைய DA (34%) - மாதம் ரூ 6120

3. புதிய DA (38%) - மாதம் ரூ 6840

4. புதிய DA உடன் தொகை அதிகரிக்கப்பட்டது - மாதம் ரூ 6840- 6120 = 720

5. ஆண்டு சம்பள உயர்வு - 720X12= ரூ 8640

அடிப்படை அதிகபட்ச சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - மாதம் ரூ 56900

2. தற்போதைய DA (34%) - ரூ 19346

3. புதிய டிஏ (38%) - ரூ 21622

4. புதிய DA உடன் அதிகரித்த தொகை - மாதத்திற்கு ரூ 21622-19346 = 2276

5. ஆண்டு சம்பள உயர்வு - 2276 X12= ரூ 27,312

செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பரிசாக கிடைக்கப் போகிறது.

No comments:

Post a Comment