முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: தேசிய மருத்துவ ஆணையம் - Daily Dhuniya

Breaking

Monday, July 4, 2022

முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: தேசிய மருத்துவ ஆணையம்

முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயா் சிறப்பு படிப்புகளைத் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஹெச் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயா் சிறப்பு படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருத்தல் அவசியம். புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பங்கள் இருத்தல் அவசியம். அதேபோன்று, அதற்கான விண்ணப்பக் கட்டணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment