ஆசிரியருக்கு எதிரான வழக்குசாட்சி பதிவு செய்ய தடை - Daily Dhuniya

Breaking

Sunday, July 31, 2022

ஆசிரியருக்கு எதிரான வழக்குசாட்சி பதிவு செய்ய தடை

தனியார் பள்ளி ஆசிரியருக்கு எதிரான 'போக்சோ' வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்.

இவர், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்படி, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ சட்டத்தின் கீழ், எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன

.இந்த எட்டு வழக்குகளையும் தனித்தனியே விசாரிக்கவும், ஒன்றாக விசாரிக்கக் கூடாது எனவும் கோரி, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அட்டவணையாக தாக்கல் செய்யவும், மனுவுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஆக., 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.அதுவரை, சிறப்பு நீதிமன்றம் சாட்சியங்களை பதிவு செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment