200 பள்ளி மாணவர்களுக்கு 50 மிலி சானிடைசர் வாங்கி கொடுத்தால் வழக்கு ரத்து: குற்றவாளிக்கு விநோத தண்டனை - Daily Dhuniya

Breaking

Sunday, July 31, 2022

200 பள்ளி மாணவர்களுக்கு 50 மிலி சானிடைசர் வாங்கி கொடுத்தால் வழக்கு ரத்து: குற்றவாளிக்கு விநோத தண்டனை

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் டெல்லியில் இருந்து சிகாகோ செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றார். அவரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் ஒரு தோட்டா மட்டும் இருந்தது. விசாரணையில், தனது மாமா உரிமம் பெற்ற துப்பாக்கியை தீபாவளிக்கு பயன்படுத்தியதாகவும் அதில் ஒரு தோட்டா கவனக்குறைவாக தான் அணிந்திருந்த கால்சட்டையில் இருந்துள்ளது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருக்கிறார். ஆனால், போலீசார் அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 28ம் தேதி இதை விசாரித்த நீதிபதி சிங், ‘மனுதாரரிடம் இருந்து ஒரே ஒரு தோட்டா மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஆயுதங்களோ, துப்பாக்கியோ அவரிடம் இல்லை. எனவே, அவரை குற்றத்திற்கு பொறுப்பாக்க முடியாது. இருப்பினும், ஒரு தொடக்கப் பள்ளிக்கு சென்று 200 மாணவர்களுக்கு 50 மில்லி மிட்டர் கொசுவிரட்டியும், 50 மில்லி லிட்டர் சானிடைசரையும் அவர் வாங்கி தர வேண்டும். அப்படி செய்தால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படும்,’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment