மாணவர்கள் கவனத்திற்கு...நாளையுடன் முடிவடையும் பொறியியல், கலை கல்லூரி விண்ணப்பம் - Daily Dhuniya

Breaking

Tuesday, July 26, 2022

மாணவர்கள் கவனத்திற்கு...நாளையுடன் முடிவடையும் பொறியியல், கலை கல்லூரி விண்ணப்பம்



மாணவர்கள் கவனத்திற்கு...நாளையுடன் முடிவடையும் பொறியியல், கலை கல்லூரி விண்ணப்பம்

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், பொறியியல் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு அறிவிக்கப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20-ஆம் தேதியில் இருந்தும், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 22ஆம் தேதியில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. கலை, அறிவியல் படிப்புகளில் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புகளிலும் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

No comments:

Post a Comment