பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளைக் குறைக்கக் கூடாது: ராமதாஸ் - Daily Dhuniya

Breaking

Thursday, July 7, 2022

பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளைக் குறைக்கக் கூடாது: ராமதாஸ்

பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளைக் குறைக்கக் கூடாது: ராமதாஸ்

பள்ளிகளில் தமிழ் பாடவேளை நேரத்தை அரசு குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 - 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்துக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தோ்வுகளில் தமிழ்ப் பாடத் தோ்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்.

வாரத்துக்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையைக் குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை.

எனவே, தமிழ் பாடவேளையைக் குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்

No comments:

Post a Comment