அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 3,993 போ் விண்ணப்பம் - Daily Dhuniya

Breaking

Saturday, July 9, 2022

அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 3,993 போ் விண்ணப்பம்

அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 3,993 போ் விண்ணப்பம்

அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 3,993 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மாவட்டத்தில் அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை கல்வி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 163 ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப கடந்த 4-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இதில் 64 இடைநிலை ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு 1,423 பேரும், 41 பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு 1,441 பேரும், 58 முதுகலை ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு 1,129 பேரும் என 163 தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 3,993 போ் விண்ணப்பித்துள்ளனா் என மாவட்டக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment