இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. வங்கி போன்ற எந்த ஒரு சேவையையும் பெற ஆதார் அட்டை என்பது தற்போது கட்டாயமாக உள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டையில், உங்களின் பயோமெட்ரிக் மற்றும் தனிநபர் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை சிலர் விரும்பாததால், அதனை மாற்ற வழிகளை தேடி வருகின்றனர்.
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானது தான். அதற்கு, https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, அதில் புகைப்படத்தை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அருகிலுள்ள ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை அடையாள சான்றாக அளிக்கலாம். ஆதார் மையத்தில் உங்களது புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும்.
இந்நிலையில் புகைப்படம் மாற்றுவது தொடர்பான புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டு உங்களுக்கு ஆதார் மையத்தில் வழங்கப்படும். இதற்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதனையடுத்து 2 வாரங்களில் நீங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்த முகவரிக்கு, புதுப்பிக்கப்பட்ட அட்டை வந்து சேரும்.

No comments:
Post a Comment