கிராமப்புற பள்ளிகள்
'கிராமங்களிலுள்ள பள்ளிகளின் பராமரிப்புக்கு, நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்' என, பெற்றோர் யோசனை தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித்தரத்தை மேம்படுத்த, அரசு முனைப்பு காட்டி வருகிறது. அவிநாசி ஒன்றியத்தில், 118 ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.கிராமப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில், பராமரிப்பு மேற்கொள்ள, ஆசிரியர்கள் திணறுகின்றனர். பள்ளியிலுள்ள கழிப்பறை, வளாகம், புல், புதர்களை வெட்டி சுத்தம் செய்வது போன்ற பல பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், போதுமான பணியாளர்கள் இல்லை.இருப்பினும், சில ஊராட்சிகளில், அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் பராமரிப்பு பணி மேற்கொள்ள உதவுகின்றனர்.
பெற்றோர் சிலர் கூறுகையில்,
'ஊராட்சிகளில் நுாறு நாள்வேலை உறுதி திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சுழற்சி முறையில் ஓரிரு தொழிலாளர்களை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள, அனுமதிக்க வேண்டும். தற்போது பள்ளி மேலாண்மை குழுவினரும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களும் பள்ளி வளர்ச்சிக்கு உதவ தயாராக உள்ளனர்,' என்றனர். ஒத்துழைப்புமிக அவசியம்!
இது குறித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:பள்ளி தலைமையாசிரியர்கள், இதுபோன்ற தங்களின் தேவைகளை அந்தந்த ஊராட்சி தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிளும், ஊராட்சி நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருந்து, ஊராட்சி ஒன்றிய பள்ளிககளின் தேவைகள் சார்ந்து கோரிக்கை வைத்தால், ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து கொடுப்பர்.
ஒரு சில இடங்களில், அத்தகைய ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லை என தெரிய வருகிறது. அத்தகைய சூழலில் உள்ளவர்கள், அதுகுறித்த தகவலை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம். ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் உரிய ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment