மாநில கல்விக்கொள்கை
மாநில கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் மாநிலங்களின் கல்வி மற்றும் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது என்று பல மாநிலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதை தமிழக அரசும் ஏற்கவில்லை. இந்நிலையில், மாநில கல்விக் கொள்கையை வகுக்கப் போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அதுகுறித்து ஆய்வு செய்து கொள்கைகளை வகுக்க வல்லுநர் குழு ஒன்றையும் அறிவித்தார். நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் பேராசிரியர் ஜவகர்நேசன், ராமானுஜன், சுல்தான் இஸ்மாயில், முனைவர் அருணா ரத்தினம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்ளையின் தலைவர் ஜெயஸ்ரீதாமோதரன் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக்குலேஷன் இயக்குனர் கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவினர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து அவரது அறிவுரைகளை கேட்டனர். அதற்கு பிறகு ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் வரலாற்று மரபு, அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாநிலத்துக்கான கல்விக் கொள்கை அமைப்பதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு முன்னதாக பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துகள் கேட்கவும், எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதால், அது தொடர்பாக இந்த குழு இன்று ஆலோசனை நடத்தியது.
அத்துடன் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டியது என்னவென்றால், தமிழகத்தின் கல்வித் தரம் என்பது உலக அளவில் உள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான கல்வியாகவும் தொழில்நுட்பம் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கல்வியாகவும் அது அமையும் வகையில் வடிவமைக்கப்படும். தேர்வு முறைகளில் திருத்தங்கள் கொண்டு வரவும், மேனிலைக் கல்வி முடித்தவர்கள் உயர்கல்வியில் விட்டுவிடாமல் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அமையும். மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஒரு ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த கொள்கை தயாரித்து அரசிடம் வழங்கப்படும். இவ்வாறு நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment