69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 'அட்மிஷன்'கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அரசு உத்தரவு - Daily Dhuniya

Breaking

Wednesday, June 15, 2022

69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 'அட்மிஷன்'கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அரசு உத்தரவு

"In all the colleges and universities in Tamil Nadu, admission to all courses will be done as per the 69 per cent reservation," said Higher Education Minister Ponmudi.

In Chennai, he gave an interview: In the course of M.Sc., Biotechnology at Kamaraj University, Madurai, 10 places are eligible for financial assistance from the Central Government. For these places, the university administration will withdraw the notice that the admission of students will be conducted as per the rules of the Central Government.

In all the universities and colleges including Madurai Kamaraj University, Chennai University, Chennai Anna University, students will be admitted only on the basis of 69 per cent reservation by the Government of Tamil Nadu. Of these, the ranking list will be prepared on the basis of 'merit' only.

Regardless of the caste, seats will be allotted only to those who get high marks. There should be no mess in this, educational institutions should adhere to the system. In all arts, science colleges and universities, in the current academic year, all the subjects in the syllabus should be fully conducted. That is, lessons will be conducted according to the pre-Corona syllabus. The graduation ceremony of Anna University will be announced soon, said Ponmudi. 'தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படியே, அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

மதுரை காமராஜ் பல்கலையில் உள்ள, எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிப்பில், 10 இடங்கள் மத்திய அரசின் நிதி உதவி பெறுவதாக உள்ளது. இந்த இடங்களுக்கு, மத்திய அரசின் விதிப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற அறிவிப்பை, பல்கலை நிர்வாகம் வாபஸ் பெறும். மதுரை காமராஜ் பல்கலை, சென்னை பல்கலை, சென்னை அண்ணா பல்கலை உட்பட அனைத்து பல்கலைகளிலும், கல்லுாரிகளிலும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.மேலும், 31 சதவீத இடங்கள், பொது பிரிவில் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான இடங்கள். இதில், 'மெரிட்' அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

எந்த ஜாதியினர் ஆனாலும், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப் படும். இதில் எந்த குளறுபடியும் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், நடப்பு கல்வி ஆண்டில், பாடத் திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் முழுமையாக நடத்த வேண்டும். அதாவது, கொரோனாவுக்கு முன்பிருந்த பாடத் திட்டத்தின்படி பாடங்கள் நடத்தப்படும். அண்ணா பல்கலையின் பட்டமளிப்பு விழா,கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு பொன்முடி கூறினார்.-

No comments:

Post a Comment