தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அவகாசம் நீட்டிப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, June 21, 2022

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அவகாசம் நீட்டிப்பு

Extension of opportunity for National Writer's Award

The Department of School Education has announced that teachers who are eligible for the National Best Author Award can apply until the 30th. Teachers' Day is celebrated across the country on Sept. 5, the birthday of the late former president Sarvapalli Radhakrishnan. In turn, the National Author Award is presented on behalf of the Central Government.

A letter has been received from the Central Department of Education to the Tamil Nadu School Education Department to send applications for this year's award. Accordingly, government and government-funded school principals and teachers are required to register directly at nationalawardstoteachers.education.gov.in/.

Retired teachers and teachers doing administrative work in offices should not apply for this award. The deadline for registering applications for this has been extended to the 30th of this month, as the deadline was extended to the previous day. Tamil Nadu teachers are not applying in large numbers.

Therefore, it has been announced that all interested and qualified teachers can apply. Furthermore, without any recommendation for this award, talented teachers are to be selected. Therefore, primary education officials are asking teachers who are confident in their skills and work to apply.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அவகாசம் நீட்டிப்பு

'தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியான ஆசிரியர்கள், வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் சார்பில், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்புமாறு, மத்திய கல்வி துறையில் இருந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் வந்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக, nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாக பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய, நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்த நிலையில், இந்த அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆசிரியர்கள், அதிக அளவில் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விருதுக்கு சிபாரிசு எதுவுமின்றி, திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தங்களின் திறமை மற்றும் பணியின் மீது நம்பிக்கை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment