கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலியாக உள்ள 5 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு 4 பேரும், ஓட்டுனர் பணிக்கு ஒருவரும் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் 1988 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணிக்கு சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளமாக வழங்கப்படும். ஓட்டுனர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம். https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு சென்று, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை எந்த தவறும் இன்றி முழுமையாக பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜூலை 5 ஆம் தேதிக்குள அனுப்ப வேண்டும். தபாலை அனுப்ப வேண்டிய முகவரி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம்-629177.

No comments:
Post a Comment