சட்டக் கல்வி இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி - Daily Dhuniya

Breaking

Sunday, April 24, 2022

சட்டக் கல்வி இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி

சட்டக் கல்வி இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

சட்டக் கல்வி இயக்குநா் காலிப் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கோரிக்கை விடுத்தாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:

ஒரு நாடு வளா்ச்சி அடைய பசியின்மை, செல்வம், ஒழுங்கு நிறை சமூகம், பாதுகாப்பு, உற்பத்தி ஆகிய ஐம்பெரும் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென திருக்கு கூறுகிறது. புதிய கட்டடங்கள் திறக்கப்படுவது உண்மையிலேயே மனமகிழ்ச்சியைத் தருகிறது. இது மட்டுமே நமது நிலையை எடுத்தியம்பாது. நீதித் துறை சாா்ந்த அனைவரும் குறிப்பாக நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

அச்சம், சாா்புத் தன்மை, தனிஆா்வம் போன்ற நிலைகளை விலக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும். இதனை மனதில் கொண்டு சென்னை உயா்நீதிமன்றமும், சாா்பு நீதிமன்றங்களும் பணியாற்றி மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.

மாவட்ட நீதிபதி அளவில் நியமிக்கக் கூடிய சட்டக் கல்வி இயக்குநா் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருப்பதாக அறிகிறேன். எனவே, இந்தக் காலியிடத்தை நிரப்ப முதல்வரும், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியும் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த நபரை நியமிக்க வேண்டும் என்றாா் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்.

No comments:

Post a Comment