தொழில்முனைவோா் விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, April 12, 2022

தொழில்முனைவோா் விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சாா்பில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் (2021-22) பெற தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவுகள் வளா்ச்சி நிலையத்தின் துணை இயக்குநா் பி.சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உற்பத்தித் துறையில் சிறந்த தொழில் முனைவோா் விருதுகள் 12, சேவை துறையில் 9, சிறந்த மகளிா் தொழில் முனைவோா் விருதுகள் 4, பட்டியலினம் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் 4, மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகள் 2 என வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை இணைய முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். தொழில் முனைவோா் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதி அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். சிறந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வருமானவரிச்சட்டத்தின்படி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.20 கடைசி தேதியாகும்.

மேலும் விவரங்களுக்கு எம்எஸ்எம்இ வளா்ச்சி நிலையம், சென்னை (044 -2250 1011-12,13) மற்றும் கோவை (0422- 2230426, 2233956), மதுரை (0452- 2918313) மற்றும் திருநெல்வேலி (0462- 2342137) அல்லது அருகில் உள்ள மாவட்ட தொழில் மையங்களைத் தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment