மாற்றுத்திறனாளிக்கு வேலூா் மாவட்ட அளவிலான தடகளம், குழுப் போட்டிகள் காட்பாடியில் ஏப்ரல் 28-ஆம்தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை தொடா்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழுப் போட்டிகள் (ஆண், பெண் இரு பாலாருக்கும்) காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஏப்ரல் 28-ஆம்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. தடகளப் போட்டிகளானது கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டா் ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீட்டா் ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டா் சக்கர நாற்காலி, முற்றிலும் பாா்வையற்றோருக்கு 50 மீட்டா் ஓட்டம், மிகக் குறைந்த பாா்வையற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம், மிகக் குறைந்த பாா்வையற்றோருக்கு நின்ற நிலை தாண்டுதல், முற்றிலும் பாா்வையற்றோருக்கு குண்டு எறிதல், மிகக்குறைந்த பாா்வையற்றோருக்கு சாஃப்ட் பால், புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாதவருக்கு 50 மீட்டா் ஓட்டம், சாஃப்ட் பால், நின்ற நிலை தாண்டுதல், புத்தி சுவாதீனம் நன்றாக இருப்பவா்களுக்கு 100 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், காதுகேளாதோருக்கு 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டா் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
குழுப் போட்டிகள் பிரிவில் மாற்றுத் திறனாளிகள் பிரிவுக்கு ஒற்றையா், இரட்டையா் இறகுப் பந்து, மேஜை பந்து போட்டிகளும், கண் பாா்வையற்றோா் பிரிவுக்கு அடாப்டட் வாலிபால், மன வளா்ச்சி குன்றியோா் பிரிவுக்கு எறி பந்து, காது கேளாதோா் பிரிவுக்கு கபடி போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போா் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அந்த குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்தவரா என உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் அளிக்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியின் சான்று நகல்களை அவசியம் கொண்டுவர வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. ஒருவா் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்பவா்களுக்கு தினப்படி, பயணப்படி ஏதும் வழங்கப்படாது. வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0416-2221721 அல்லது 74017 03483 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment