ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022 - Daily Dhuniya

Breaking

Tuesday, February 1, 2022

ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022

ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கீழ் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் கட்டுமானம், ரயில் மற்றும் மெட்ரோ, ஏரோஸ்பேஸ், அகழ்வாராய்ச்சி போன்ற துறைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஹெவி இன்ஜினியரிங் நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம், இணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட குரூப் ‘ஏ’ பணியிடங்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEML) 

மொத்த காலியிடங்கள்: 25 

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் : 
பணி: Deputy General Manager (VII) - 05 
சம்பளம்: மாதம் ரூ.90,000 - 2,40,000
பணி அனுபவம்: 21 ஆண்டுகள் 

பணி: Assistant General Manager (VI) - 06 
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000
பணி அனுபவம்: 18 ஆண்டுகள்

பணி: Senior Manager(V) - 05
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
பணி அனுபவம்: 5 ஆண்டுகள்
 
பணி: Manager (IV) - 08 
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
பணி அனுபவம்: 12 ஆண்டுகள்

பணி: Assistant Manager (III) - 01 
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
பணி அனுபவம்: 8 ஆண்டுகள். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 33 முதல் 51 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி பிரிவில் இளநிலைப் பட்டம்,  முதுநிலைப் பட்டம், சமூகவியல், சந்தையியல், நிதியியல், எச்ஆர் பிரிவில் எம்பிஏ, எம்எஸ்டபுள்யு சிஏ, ஐசிடபுள்யுஏ, சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022

மேலும் விபரங்கள் www.bemlindia.in அல்லது https://www.bemlindia.in/Writereaddata/Career/KP_S_01_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment