அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள்; மாநில அரசின் கீழான அதிகார அமைப்புகளில் உள்ள பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக ஆட்களை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கீழான அதிகார அமைப்புகளில் உள்ள பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே, ஆட்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.இதனால், கிராமப் புறங்கள் மற்றும் ஒதுக்குப் புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் 2022ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் செயற்பணிகள் சட்டம் என்று அழைக்கப்படும். இந்த சட்ட மசோதா காரணமாக, போக்குவரத்து துறை, மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், ஆவின், சுற்றுலா மேம்பாட்டு கழகம் போன்றவற்றில், தனியே ஆட்கள் தேர்வு செய்ய முடியாது. இனி, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு செய்யும் வகையில், வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சட்ட திருத்த மசோதா தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:
தமிழக வாழ்வுரிமை கட்சி, வேல்முருகன்: கடந்த ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பணிக்கு, வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்றுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அமைச்சர் தியாகராஜன்: நேரடியாக அரசு பணியாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவன பணியாக இருந்தாலும், அனைத்து பணிகளும் தமிழர்களுக்கே போய் சேர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில், படிப்படியாக மாற்றங்களை கொண்டு வருகிறோம். கடந்த கூட்டத்தொடரில், தமிழ் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட திருத்த மசோதா, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், டி.என்.பி.எஸ்.சி., வழியே ஆட்களை தேர்வு செய்வதற்கான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வரும் கூட்டத் தொடரில்,உள்ளாட்சிகள், பல்கலைகள் என எங்கெல்லாம் பாக்கி உள்ளதோ, அனைத்தையும் இந்த விதியில் கொண்டு வர, நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, உறுப்பினர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:
Post a Comment