பிளஸ் 2 தேர்வு விதி நீக்கம்; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு - Daily Dhuniya

Breaking

Saturday, January 8, 2022

பிளஸ் 2 தேர்வு விதி நீக்கம்; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

பிளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான், அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தவில்லை. கூடுதல் மதிப்பெண்கள்பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளிலும், பிளஸ் 2 செய்முறை மற்றும் உள்மதிப்பீட்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்ச்சி பெற்ற 34ஆயிரத்து 317 பிளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக இரண்டாவது முறை தேர்வு எழுதினர்.

அவர்களில் 11 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:பிளஸ் 2 இறுதி தேர்ச்சிக்கு இரண்டாவதாக எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தான், தேர்ச்சியை நிர்ணயிக்கும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அவ்வாறு இல்லாமல் இரண்டாவது தேர்வை விட முதல் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அதன் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. விதிமுறை

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:இரு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனரோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இரண்டாவது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்ச்சி என்ற விதிமுறையை சி.பி.எஸ்.இ., நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment