இந்திய கல்வி முறை புதிய உச்சத்துக்கு செல்லும்: மத்திய கல்வித் துறை அமைச்சா் - Daily Dhuniya

Breaking

Friday, November 12, 2021

இந்திய கல்வி முறை புதிய உச்சத்துக்கு செல்லும்: மத்திய கல்வித் துறை அமைச்சா்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ மூலம் நாட்டின் கல்வி முறை புதிய உச்சத்துக்கு செல்லும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

சண்டீகா் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசியதாவது: உலகின் அறிவு மையமாக திகழ்வதில் இந்தியாவின் வலிமை மற்றும் கரோனாவுக்கு பிந்தைய புதிய உலகில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கும். தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மூலம் கொள்கைகளை செயல்படுத்துதல், தரமான கல்வி நிறுவனங்கள், பல்முனை கலாசாரத்துடன் கூடிய சமூக உள்ளடக்கல் உள்ளிட்டவையும், புதுமை, தொழில்முனைவு மற்றும் சா்வதேசமயமாக்கல் ஆகியவற்றின் மீதான கவனமும் இந்தியாவின் கல்வி முறையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்றாா்.

‘இந்த உலகமே ஒரு குடும்பம்’ எனும் இந்தியாவின் தொன்மையான நம்பிக்கையைப் பற்றி குறிப்பிட்ட அவா், ‘உலகளாவிய குடிமக்களைத் தயாா்படுத்துவதற்கும், பொதுவான உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதற்கும், பொதுவான இலக்குகளை அடைவதற்கும் பொதுவான புரிதலுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.

No comments:

Post a Comment