அரசு பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வால்பாறை ஒன்றியத்தில் உள்ள, 63 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.வட்டார கல்வி அலுவலர்கள் காளிமுத்து, யோகேஸ்வரி தலைமையில் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் வரவேற்றார்.கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது:பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மானியம் வழங்கப்படும். மாணவர்களிடம் ஆதார் எண், வங்கி கணக்கு எண்களை தவறாமல் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் கைகளை சுத்தம் செய்யும் வகையில், சானிடைசர் வைக்க வேண்டும். 'மாஸ்க்' அணியாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் 'மாஸ்க்' வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.பள்ளியில் தினமும் காலை நேரத்தில், மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பாதுகாப்பு பணிக்காக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த கல்வி மானியத்தின் கீழ், 30 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளுக்கு, 10 ஆயிரமும், 100 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளுக்கு, 25 ஆயிரமும், மானியமாக வழங்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.ஆலோசனைக்கூட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில்குமார், ரவிசந்திரன், சுகந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment