ஜப்பான் உதவித்தொகை - 37 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Sunday, November 14, 2021

ஜப்பான் உதவித்தொகை - 37 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

முக்கியத்துவம்:ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள 37 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 140 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

துறைகள்:ஜப்பானின் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கல்வி நிறுவனங்களில் பொருளாதாரம், வணிகம் மற்றும் மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ச்சி தொடர்பான துறைகளில் முதுநிலை படிப்புகளை உதவித்தொகையுடன் மேற்கொள்ளலாம்.

தகுதிகள்:*ஆசியன் டெவெலப்மெண்ட் வங்கியின் உறுப்பினர் மற்றும் ஜாப்பனீஷ் உதவித்தொகைக்கு தகுதியான நாட்டைச் சேர்ந்த குடிமகனமாக இருக்க வேண்டும்.

* குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் தகுதியான படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

* இளநிலை பட்டப்படிப்புடன் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

* குறைந்தது 2 ஆண்டுகள் முழுநேர பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* 35 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 45 வயதுவரை விலக்கு உண்டு.* நல்ல உடல் நலம்.

* படிப்பு காலம் முடிந்ததும் சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல வேண்டும்.

உதவித்தொகை விபரம்:* முழுமையான கல்விக்கட்டணம்

* தங்குமிடத்திற்கான மாதாந்திர செலவு* புத்தகங்கள் மற்றும் கல்வி கற்பதற்கான செலவினங்கள்

* மருத்துவக் காப்பீடு

* போக்குவரத்து செலவு ஆகிய செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

மேலும், ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு இதர செலவினங்களுக்கும் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு: https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program

No comments:

Post a Comment