ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., இணையதளத்தில், முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை- 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை - -1 ஆகிய காலியிடங்களுக்கு, பணி நியமனம் செய்ய செப்., 9ல் அறிவிக்கை வெளியானது. செப்., 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்நிலையில், ஆசிரியர்களின் நேரடி நியமனத்துக்கு வயது உச்ச வரம்பை உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கேற்ற வகையில், ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவுக்கு உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த, 2002க்கு முன் எம்.பி.எட்., கல்வி தகுதியுடன் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவர்கள்; முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு முடித்து, பின், பி.எட்., பட்டம் பெற்று, அதன்பின் முதுநிலை இரண்டாம் ஆண்டை தொடர்ந்தவர்கள் உள்ளிட்டோர், விண்ணப்ப பதிவு செய்ய உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதை விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொண்டு, உரிய முறையில் பதிவு செய்யவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment