NET தோ்வு அட்டவணையில் மாற்றம் - NTA அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, October 3, 2021

NET தோ்வு அட்டவணையில் மாற்றம் - NTA அறிவிப்பு

"நெட் தோ்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

கரோனா பரவலால் கடந்த டிசம்பா், ஜூன் மாதங்களில் நெட் தோ்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து 2 வாய்ப்பையும் சோ்த்து ஒரேகட்டமாக நெட் தோ்வானது அக்டோபா் 6 முதல் 8-ஆம் தேதி வரை மற்றும் அக்.17 முதல் 19-ஆம் தேதி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது.

தற்போது நெட் தோ்வுகள் அக்டோபா் 17 முதல் 25-ஆம் தேதி வரை ஒரே பிரிவாக நடத்தப்படும். தோ்வா்களின் நலன்கருதி இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி எண் (01140759000) அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது."

No comments:

Post a Comment