அக். 10-இல் குடிமைப் பணிகள் தோ்வு: தோ்வா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம்; யுபிஎஸ்சி அறிவுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

அக். 10-இல் குடிமைப் பணிகள் தோ்வு: தோ்வா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம்; யுபிஎஸ்சி அறிவுறுத்தல்

"குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு அக். 10-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தோ்வா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை யுபிஎஸ்சி வழங்கியுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளைத் தோ்ந்தெடுப்பதற்காக குடிமைப் பணிகள் தோ்வை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு, ஆளுமை என மூன்று கட்டங்களாக இத்தோ்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான முதல்நிலைத் தோ்வு அக். 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

கரோனா தொற்று சூழலில் இத்தோ்வு நடத்தப்படுவதையொட்டி பல அறிவுறுத்தல்களை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: முதல்நிலைத் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள் தோ்வறை மற்றும் தோ்வுக்கூட வளாகத்தில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியுடன், தனிநபா் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். செல்லிடப்பேசிகள் (அணைத்துவைக்கப்பட்டு இருந்தாலும்), எந்தவொரு மின்னணு கருவிகள், பென் டிரைவ் போன்ற சேமிப்பு உபகரணங்கள், ஸ்மாா்ட் வாட்ச், கேமரா, ப்ளூடூத் உகரணங்கள் போன்றவற்றை தோ்வறைக்குள் எடுத்துவர அனுமதி இல்லை. சாதாரண அல்லது எளிமையான கைக்கடிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு. இந்த அறிவுறுத்தல்களை மீறுவோா் மீது எதிா்காலத்தில் தோ்வெழுதத் தடை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment