பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் கத்தி முனையில் 10 பவுன் நகை பறிப்பு - அட்மிஷன் பெற செல்வதுபோல் நடித்து துணிகரம் - Daily Dhuniya

Breaking

Sunday, October 31, 2021

பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் கத்தி முனையில் 10 பவுன் நகை பறிப்பு - அட்மிஷன் பெற செல்வதுபோல் நடித்து துணிகரம்

கோவை யில் அட்மிஷன் பெற செல்வதுபோல் நடித்து தனியார் பள்ளி ஆசிரியை யிடம் கத்தி முனையில் 10 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை விகேகே மேனன் ரோடு வெங் கிடசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் அன்புக்கரசி (39). இவர் சித்தாபுதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தி னம்பள்ளியில் இருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தனது மக னுக்கு பள்ளியில் அட்மி ஷன் போடவேண்டும். அது தொடர்பாக பேச வேண்டும் என தெரிவித் துள்ளார். இதனையடுத்து அன்புக்கரசி மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை அவரிடம் தெரிவித்துக்கொண்டிருந் தார். அப்போது அங்கு ஆசிரியை அன்புக் ரசி தவிர வேறு யாரும் இல்லை.

திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியை காட்டி அன்புக்கரசியை மிரட் டினார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்தார்.

கண்ணிமைக் கும்நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச் சியில் உறைந்துபோன அன்புக்கரசி கூச்சல் போட்டார். அங்கிருந்த வர்கள் வருவதற்கு அந்த நபர் தப்பி சென்றுவிட் டார். இது தொடர்பாக காட்டூர் போலீசில் அன் புக்கரசிபுகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசி ரியையிடம் நகை பறித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment