மாணவர்கள், அரசியல் சாசனம் வாயிலான தீர்வுகளை நாடுவதை விட படிப்பில் கவனம் செலுத்தினால் போதும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், தன் தந்தையும், வழக்கறிஞருமான ரவி பிரகாஷ் மெஹ்ரோத்ரா வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துஉள்ளார். அதில், கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறந்து, மாணவர்கள் கல்வி பயில உத்தரவிடும்படி கோரப்பட்டுள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:பல நாடுகளில் அவசரமாக பள்ளிகள் திறக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்பை நாம் பார்க்கிறோம். இங்கும் கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா மீண்டும் தலை துாக்கும் என்ற அச்சம் இன்னும் நீங்கவில்லை. குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அதுபோல அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை; அது குறித்த தரவுகளும் அமர்விடம் இல்லை.அதனால், அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பும்படி உத்தரவிட முடியாது. அது, அந்தந்த மாநில அரசுகளின் முடிவைப் பொறுத்தது.மாணவர்கள், அரசியல் சாசனம் வாயிலான தீர்வுக்கு பதிலாக பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த மனு விளம்பரத்திற்காக போடப்பட்டதாக கூறவில்லை. எனினும், கொரோனா தொடர்பாக மாநில அரசுகளின் முடிவில் தலையிட விரும்பவில்லை. இந்த மனுவை திரும்பப் பெற உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனுவை திரும்பப் பெறுவதாக வழக்கறிஞர் தெரிவித்தார்

No comments:
Post a Comment