அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.
முறைகேடுகளை திருத்த முடியும் என்ற அடிப்படையில் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம்.
தமிழ்நாட்டின் கடன், வருமானம், செலவினங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் வருமானம் குறைந்திருப்பதை பலமுறை சுட்டி காட்டியுள்ளோம்.
2006-2011 திமுக ஆட்சியில் வருமானம் உபரியாக இருந்தது.
10 ஆண்டு அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது.
கடன் வாங்கிதான் அன்றாட செலவுகளை செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பொருளாதார சரிவு.
கொரோனா முடக்கத்துக்கு முன்னரே தமிழகத்தில் பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது.
அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைமை இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி.
தமிழகத்தில் கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடி.
தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு ரூ2,63,976 பொதுகடன் உள்ளது.
தமிழக அரசின் தற்போதைய பொது கடன் ரூ5,70,189 கோடி.
தமிழகத்தை ஒப்பிடுகையில் பீகார் மின்வாரியத்தின் நிலைமை நன்றாக உள்ளது.
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடி; 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடி.
மறைமுக கடனாக ரூ39,079 கோடி எதற்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை கணக்கு சரியாக பராமரிக்கவில்லை.
அதிமுக அரசின் கடன் உத்தரவாதத்தில் 90% மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பிடிஆர்

No comments:
Post a Comment