நாமக்கல் மக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு - நாள்: 08.08.21 - Daily Dhuniya

Breaking

Sunday, August 8, 2021

நாமக்கல் மக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு - நாள்: 08.08.21

கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்ப்டி ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு 23.8.2021 அன்று காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தளர்வுகள் தவறாக பயன்படுத்தப்படாமல் கண்காணித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி கொரோனா மூன்றாம் அலை தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் 9.8.2021 விதிக்கப்படுகிறது. காலை 6.00 மணி முதல் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 முதல் இரவு 10.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 10.க்கு மேல் எத்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேனீர் கடைகளும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அமர்ந்து தேனீர் அருந்தவும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment