படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு - Daily Dhuniya

Breaking

Monday, July 19, 2021

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

தமிழக அரசு ஆர்வமுள்ள படித்த வேலையற்ற இளைஞர் கள் புதிதாக தொழில் துவங்கும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற் றும் சேவை தொழிலுக்கு 10 லட்சம் முதல் 5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண் ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.

சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் WWW.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத் திற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை மாவட்ட அளவிலான நேர்காணல் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியி லிருந்தும் விலக்கு அளித்து ஆணை வழங்கியுள்ளது. ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, சம்மந்தப் பட்ட வங்கி கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும். எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், கடன் பெற்று சுய தொழில் துவங்கி பயனடைலாம். மேலும் விவரங்களுக்கு, ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். இவ் வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment