வீட்டுக் கடன் வட்டி விகிதம் – முக்கிய விவரங்கள் இதோ - Daily Dhuniya

Breaking

Monday, July 19, 2021

வீட்டுக் கடன் வட்டி விகிதம் – முக்கிய விவரங்கள் இதோ

நாட்டின் முக்கிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை பற்றிய முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

வீட்டுக் கடன் விகிதம்:

வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களின் சொந்த வீட்டு கனவையும் நிறைவேற்றுவதில் வீட்டுக்கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சில நிறுவனங்கள் மிகவும் குறைந்த நியாயமான விகிதத்தில் வட்டி தொகையை நிர்ணயிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளும் முதல் வீட்டிற்கு குறிப்பிட்ட அளவிற்கு மானியம் வழங்குகிறது. மேலும், ஏறத்தாழ 16 வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன்களை வழங்குகின்றது.

தனியார் நிதி நிறுவனமான கோடக் மஹிந்திரா மற்றும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிண்ட் வங்கி ஆகியவை 6.65 சதவீத முதல் குறைவான வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. முதலில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்கும் பொழுது, வட்டி விகிதங்களில் இருக்கும் மாற்றங்களினால் வேறு ஒரு நிதி நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டம் 2019, அக்டோபருக்கு முன்னதாக வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தும்.

2019ம் ஆண்டில் நாட்டின் மிக குறைந்த வட்டி விகிதம் 8.40% ஆக இருந்தது. 2020 மார்ச் மற்றும் மே மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கியால் ஆர்.எல்.எல்.ஆர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து நாட்டின் மிக குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.49 – 6.95% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து மற்றொன்றில் மாறுவதற்கு குறைந்தபட்சம் 35 – 50 அடிப்படை புள்ளிகள் வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் கடன் பெற்ற நிறுவனம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment