தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு எப்போது? முதல்வர் பதில்!! - Daily Dhuniya

Breaking

Monday, July 19, 2021

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு எப்போது? முதல்வர் பதில்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்து கேள்விக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக பாடங்களை முழுமையாக நடத்த முடியாது என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை கட்டாயம் திறக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் முக ஸ்டாலின், நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை பரவாமல் இருப்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. ஒரு வேலை கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைத்து தரப்பு கருத்தைக்கேட்டு முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment