வாடகை வாகன ஓட்டிகளுக்கு உதவித்தொகை – ஜூலை 15 கடைசி நாள்!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு பல மாதங்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில் வாடகை வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.3000 உதவித்தொகை பெற ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா உதவித்தொகை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூன் 14 வரை பொது போக்குவரத்துக்கு தடை அமலில் இருந்தது. மேலும் அதன் பின்னர் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு ஜூலை 19 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக பொதுப்போக்குவரத்து தடை காரணமாக வாடகை வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்ய அரசு சார்பில் அனைத்து ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.3000 உதவித்தொகை வழங்க உத்தரவிட்டது. இந்த உதவித்தொகை பெற அனைத்து வாகன ஓட்டிகளும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் பலர் வாகன ஓட்டிகள் உதவித்தொகை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்கள் அனுப்ப ஜூலை 15 கடைசி தேதி ஆகும். மேலும் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் ஜூலை 15 மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசு நேரடியாக வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் செய்து விடும். கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் வாகன ஓட்டுநா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment