தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!! - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!! தமிழகத்தின் பொது விநியோக இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் ரேஷன் கார்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொது விநோயாக திட்டம்:
தமிழகத்தில் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பொது விநியோக ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மக்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் ரேஷன் அட்டைகளை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். தமிழகத்தில் தற்போது 5 வெவ்வேறு விதமான ரேஷன் அட்டைகள் PHH, PHH – AYY, NPHH, NPHH – S, NPHH – NC என்ற பெயரில் உள்ளன. 2.2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் அட்டைகளின் மூலமாக அரசு பல சலுகைகளை மக்களுக்கு வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது அரிசி, சேலை, வேட்டி மற்றும் சமையல் பொருட்கள் என்று வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த கொரோனா காலத்தில் புதிதாக ஆட்சி அமைத்த திமுக அரசு மக்களுக்கு 4000 ரூபாய் ரொக்கமாக வழங்கியது. அது மட்டுமின்றி 14 பொருட்கள் கொண்ட தொகுப்பினையும் மக்களுக்கு வழங்கியது. இதன் காரணமாக பலரும் ரேஷன் அட்டைகள் பெற முன்வந்தனர்.

ரேஷன் அட்டைகளை பெற அரசின் பொது விநியோக இணையதளம் செயல்பட்டு வருகின்றது. www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான வகையில் ரேஷன் அட்டைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இணையதளம் பாரம்பரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்காக இணையதளம் முடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது ரேஷன் அட்டைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment