LIC நிறுவனத்தின் பெண்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம் – தினசரி ரூ.130 முதலீடு! - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

LIC நிறுவனத்தின் பெண்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம் – தினசரி ரூ.130 முதலீடு!

மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்பட்டு வரும் மிக சிறந்த காப்பீடு நிறுவனமான LIC நிறுவனம் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணம் சேர்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

காப்பீட்டு திட்டம்
கொரோனா போன்ற பேரிடர் அல்லது வேறு ஏதேனும் இக்கட்டான காலத்தில் மக்களுக்கான உதவிகரத்தை நீட்டுவதில் முக்கிய பங்கை இந்த காப்பீட்டு திட்டங்கள் வகிக்கிறது. அந்த வகையில் ஏழை, எளிய மக்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவருக்குமான சிறந்த காப்பீட்டு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் LIC நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணம் சேர்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கையை இந்த LIC காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது கன்யாதான் பாலிசி திட்டமானது, ஒவ்வொரு பெண்களின் வருங்காலத்துக்கான சேமிப்பு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ் பெற்றோர்கள் ஒரு நாளைக்கு 130 ரூபாய் முதலீடு செய்தால் மட்டுமே போதுமானதாகும். ஒரு நாளைக்கு 130 ரூபாய் என்ற வீதத்தில், பயனர் ஒருவர் ஒரு ஆண்டுக்கு 47,450 ரூபாய் தொகையை முதலீடு செய்ய வேண்டும். மேலும் பாலிசி காலத்தில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்.

இதை தொடர்ந்து உங்கள் பாலிசியின் கீழ் 25 ஆண்டுகளுக்கு பின்னாக நீங்கள் 27 லட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். இதை முதலீடு செய்வதற்கு, சில வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, பயனர் 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அவரது மகள் 1 வயதை தாண்டியும் இருக்க வேண்டும். இவற்றில் 5 லட்சம் ரூபாய் உறுதி தொகைக்கு பாலிசி எடுத்தால், மாதத்துக்கு 1,951 என்ற கணக்கில் 22 ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டும். இறுதியில் உங்களுக்கு 13.37 லட்சம் ரூபாய் கிடைக்கும். இவற்றில் 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கும் போது, மாதம் 3,901 என்ற கணக்கில் 26.75 லட்ச ரூபாய் கிடைக்கும்.

No comments:

Post a Comment