தமிழக அரசின் பட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

தமிழக அரசின் பட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்

இனி தமிழக அரசின் பட்டா தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் மூலமாக மிகவும் சுலபமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பட்டா
பட்டா பதிவுகள் என்பது நமது சொந்த நிலத்தின் உரிமை அல்லது அது குறித்த அளவீடுகள் ஆகும். இதனை சொந்தமாக வீடு வாங்குபவர்கள் கண்டிப்பாக வைத்திருத்தல் அவசியம் ஆகும். அந்த வகையில் இனி இதனை பெற அரசு அலுவலகங்களுக்கு சென்று பல நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பட்டாவை ஆன்லைன் மூலமாகவே நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா கிராமப்புறங்களில் ஹெக்டர்ஸ் என்ற அளவில் கணக்கிடபடுகின்றது. ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

வழிமுறைகள்
முதலில், https://eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.
இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் நில உரிமை என்று ஆப்சன் வழங்கப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு ஒரு பார்ம் கிடைக்கும்.
அதனை கிளிக் செய்தால் கிராமப்புறமா அல்லது நகர்புறமாக என்று கேட்கப்பட்டிருக்கும்.

அதில் உங்களுக்கானதை சரிதாக தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். பின், சப்மிட் கொடுக்க வேண்டும்.
பின், உங்களது மாவட்டம், வட்டம் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக பதிவிட வேண்டும்.
இதனை தொடர்ந்து உங்களது பட்டா எண் மற்றும் புல எண் வழங்கப்பட்டிருக்கும்.
அதனை சரியாக கொடுத்து விட்டு கேப்சா கொடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
அப்படி செய்து விட்டால், உங்களது பட்டா தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு விடும்.
அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment