'Hall ticket' for 8th class students - எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு நாளை ‘ஹால் டிக்கெட்’ - Daily Dhuniya

Breaking

Tuesday, September 27, 2022

'Hall ticket' for 8th class students - எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு நாளை ‘ஹால் டிக்கெட்’

எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு நாளை ‘ஹால் டிக்கெட்’ - 'Hall ticket' tomorrow for 8th class students

தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்குரிய தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளன.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா வெளியிட்ட அறிவிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு அக்டோபா் 10 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் செப்.29-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

இதையடுத்து தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வின்போது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாதவா்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

விரிவான தோ்வுக்கால அட்டவணை உள்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment