அண்ணா பல்கலை. கல்லூரிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை - Anna University. 5 days holiday for colleges - Daily Dhuniya

Breaking

Friday, September 30, 2022

அண்ணா பல்கலை. கல்லூரிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை - Anna University. 5 days holiday for colleges

அண்ணா பல்கலை. கல்லூரிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை - Anna University. 5 days holiday for colleges



ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 3-ஆம் தேதியும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். இதனால் அக்டோபா் 3ஆம் தேதி வேலை நாளாகும். இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளா் ரவிக்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் வரும் 3-ஆம் தேதி கட்டுமான, மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அக்டோபா் 8-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என குறிப்பிட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து தனியாா் கல்லூரிகளும் விடுமுறை அறிவித்தன. ஆயுதபூஜையையொட்டி சனிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு தொடா் விடுமுறையாக உள்ளது.

No comments:

Post a Comment