WhatsAppன் சூப்பர் அப்டேட் - Delete for Everyone 2 நாட்கள் கழித்தும் செய்யலாம் - Daily Dhuniya

Breaking

Monday, August 8, 2022

WhatsAppன் சூப்பர் அப்டேட் - Delete for Everyone 2 நாட்கள் கழித்தும் செய்யலாம்



Delete for Everyoneல் புதிய அப்டேட் - 2 நாட்கள் கழித்தும் Delete செய்யலாம்

வாட்ஸ் ஆப் வழங்கி வரும் Delete for Everyone ஆப்சனில் இனிமேல் இரண்டு நாட்கள் கழித்தும் குறுஞ்செய்திகளை நீக்கிக் கொள்ளும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்திவுள்ளது. வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களை கவரும் நோக்கத்தில் வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ் ஆப் நிறுவனம் Delete For Everyone என்ற ஆப்சனை கடந்த 2017 ல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் செய்தியை நீக்கியதும், அந்த மெசேஜ்கள் அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவரின் சாட்டில் இருந்து நீக்கம் செய்யப்படும். இந்நிலையில், இந்த ஆப்சனில் புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதாவது இதுவரை Delete For Everyone மூலம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அனுப்பிய மெசேஜ்களை நீக்க முடிந்தது. இனிமேல் இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வரை Delete For Everyone ஆப்சன் மூலம் மெசேஜ்களை நீக்கும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த வசதியை Android மற்றும் iOS இரண்டிலும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்களது வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் வந்துள்ளதா? என்பதை இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தியை நீக்கிவிட்டு, இந்த அம்சம் உங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைப் தெரிந்துகொள்ளலாம். அவ்வாறு இல்லை என்றால் இன்னும் சில நாட்களில் உங்களது மொபைலில் இந்த ஆப்சன் கிடைக்கலாம் என கூறப்படுகிறது

No comments:

Post a Comment