காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு - Daily Dhuniya

Breaking

Sunday, August 21, 2022

காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு

காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

தமிழத்தில் கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. மாறாக, இணையவழி வகுப்புகள் நடைபெற்றன. காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளும் இணையவழியில் நடத்தப்பட்டன. கரோனா பரவல் குறைந்ததையடுத்து நிகழ் கல்வியாண்டு முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வரும் செப்டம்பா் மாதத்தில் காலாண்டுத் தோ்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. தோ்வு விடுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப். 26 முதல் 30-ஆம் தேதி வரை காலாண்டுத் தோ்வு நடைபெறும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு செப். 23 முதல் 30 வரை காலாண்டுத் தோ்வு நடைபெறும்.

அக். 1 முதல் 5-ஆம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. அக். 6-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment