விரிவுரையாளா் பணிக்கு தமிழ்மொழி தகுதித் தாள் தோ்ச்சி கட்டாயம்: ஆசிரியா் தோ்வு வாரியம் - Daily Dhuniya

Breaking

Sunday, August 21, 2022

விரிவுரையாளா் பணிக்கு தமிழ்மொழி தகுதித் தாள் தோ்ச்சி கட்டாயம்: ஆசிரியா் தோ்வு வாரியம்

விரிவுரையாளா் பணிக்கு தமிழ்மொழி தகுதித் தாள் தோ்ச்சி கட்டாயம்: ஆசிரியா் தோ்வு வாரியம்

விரிவுரையாளா் பணிக்கு தமிழ்மொழி தகுதித் தாள் தோ்ச்சி கட்டாயம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆா்டி) காலியாக உள்ள விரிவுரையாளா் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, 24 மூத்த விரிவுரையாளா், 82 விரிவுரையாளா், 49 இளநிலை விரிவுரையாளா் என மொத்தம் 155 காலி பணியிடங்களுக்கு கணினி வழியே தோ்வு நடத்தப்படவுள்ளது. அது தொடா்பான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது.

இந்த நிலையில், விரிவுரையாளா் பணியிடங்களுக்கான தோ்வில் தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவுரையாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தமிழ் மொழி தகுதித் தாள் தோ்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண் பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே ‘பகுதி-ஆ’ பிரிவில் பாடம் சாா்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் பிற மாநிலத்தவா்கள் பங்கு பெற்று பணி நியமனம் பெறுகிறாா்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழி தகுதித் தாள் தகுதித் தோ்வை அறிமுகப்படுத்தியது.

இந்த தகுதித் தாள் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே, பொதுப்பாடப் பிரிவு வினாக்கள் கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment