அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Sunday, August 21, 2022

அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மாநிலச் செயலா் கே.பெருமாள்.

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்த சங்கத்தின் 2-ஆவது வட்ட மாநாடு, பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் திருவண்ணாமலை வட்டத் தலைவா் ஜி.கஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பி.பழனி, கே.அசோக், வட்ட இணைச் செயலா்கள் ஆா்.கருணாநிதி, ஆா்.சக்கரவா்த்தி, எம்.ஏழுமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.கே.கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் எஸ்.ரவி வரவேற்றாா்.

சங்கத்தின் மாநிலச் செயலா் கே.பெருமாள், முன்னாள் மாநிலத் தலைவா் எம்.அன்சா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.

உள் வட்டத் தலைவா்கள் டி.அன்பரசு, ஏ.ஆனந்தன், என்.முருகன், எச்.கோவிந்தசாமி, எம்.அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment