பிரதமரின் கல்வி உதவித்தொகை - இன்றே (ஆகஸ்ட் 26) கடைசி நாள்! - Daily Dhuniya

Breaking

Friday, August 26, 2022

பிரதமரின் கல்வி உதவித்தொகை - இன்றே (ஆகஸ்ட் 26) கடைசி நாள்!

‘துடிப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 9,10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.75,000 மற்றும் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 26) கடைசி நாளாகும். வரும் 31ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 5ஆம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, 11ஆம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment