தாராபுரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு 6ம் தேதி துவக்கம் - Daily Dhuniya

Breaking

Thursday, August 4, 2022

தாராபுரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு 6ம் தேதி துவக்கம்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அரசுக் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்த கல்வியாண்டு முதலமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வு வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கி, கல்லூரியில் நடைபெறவுள்ளது. பிறகு தொடர்ந்து, 8ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, தேசிய மாணவர் படை அந்தமான் நிக்கோபர், பாதுகாப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கும் மற்றும் பி.எஸ்சி. கணிதம் பாடத்திற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

10ம் தேதி 9.30 மணிக்கு பி.காம் பாடப்பிரிவிற்கான கலந்தாய்வும், 11ம் தேதி 9.30 மணியளவில் பி.எஸ்சி வேதிபியல், பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ-மாணவிகள் தங்களின் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், அசல் மற்றும் 2 நகல்கள் 1 ஆதார் அட்டை நகல், சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்குரிய அனைத்துச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் கொண்டுவரவேண்டும்.

இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகல்கள் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் பாடவாரியாக கல்லூரியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் புஷ்பலதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment