CUET நுழைவுத் தேர்வு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - Daily Dhuniya

Breaking

Friday, August 5, 2022

CUET நுழைவுத் தேர்வு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

க்யூட் நுழைவுத் தேர்வு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர, 'க்யூட்' எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.நடப்பு கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு, ஜூலை 15ல் துவங்கி இம்மாதம் 20 வரை நடக்கிறது.

இந்த தேர்வு, காலை - மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை நடக்க இருந்த தேர்வின் போது, 17 மாநிலங்களில் உள்ள ஒரு சில மையங்களில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த மையங்களில் மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.அதேபோல, நேற்று மாலை நடக்க இருந்த தேர்வும், முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகள், வரும் 12 - 14 ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டை வைத்தே அன்றைய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம்' என, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.இந்த தேதிகளில் தேர்வு எழுதுவதில் சிரமம் இருக்கும் மாணவர்கள், வேறு தேதி கேட்டு datechange@nta.ac.in என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment