பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: ராமதாஸ் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, July 27, 2022

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: ராமதாஸ் வரவேற்பு

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: ராமதாஸ் வரவேற்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. முதல்வரின் காலை உணவு திட்டம் குறைந்த அளவிலான பள்ளிகளில்தான் தொடங்கப்படுகிறது. இது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

Post a Comment