விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள், 2022-2023 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1000/- முதல் ரூ. 25000/- வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதையும் படிக்க | பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 3 போ் பலி
இதற்காக https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2022. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022
மேலும் விவரங்கள் பெற அணுக வேண்டிய முகவரி : மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் - scholarship201718tvl@gmail.com தொலைபேசி எண்: 044-29530169
இதையும் படிக்க | அடுத்த ஷாக்.. திருவள்ளூர் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. மக்கள் சாலை மறியல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய நல ஆணையர் பெ. அருண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment