ESI ஒதுக்கீடு மருத்துவம்; விண்ணப்பிக்க அவகாசம் - Daily Dhuniya

Breaking

Monday, July 25, 2022

ESI ஒதுக்கீடு மருத்துவம்; விண்ணப்பிக்க அவகாசம்

இ.எஸ்.ஐ., ஒதுக்கீட்டில், மருத்துவம் படிக்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மற்றும் சில மருத்துவ கல்லுாரிகளில், இ.எஸ்.ஐ., காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த ஒதுக்கீட்டில் சேர விரும்பும், இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களின் பிள்ளைகள், வாரிசு சான்றிதழ் பெற்று, https://www.esic.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க, ஆக.,3 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.

இதையும் படிக்க | 10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் மற்றுல் புதிய மதிப்பெண் சான்றிதழ் தேதி அறிவிப்பு

காப்பீட்டாளர் வாரிசு சான்றிதழ்கான விண்ணப்பத்தை இணையத்தில் பெற்று, ஆவணங்களை சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில் ஆக.,4க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, இ.எஸ்.ஐ., கிளை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும், 044 - 2830 6333; 2830 6363 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment